பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சங்க இலக்கியத்தில் உவமைகள்

பட்டன. இஃது அக்காலப் பொது மரபாகிய சார்த்திக் கூறல் என்னும் தன்மையோடு ஒத்து அமைவதாகும். உவமச் செய்திகள் இடத்தோடும் பொருளோடும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

1.3.4.1. சில குறிப்பிட்ட ஆறுகளின் மணலும் கடல் துறை மணலும் வாழ்த்தியல் மரபுக்கு உவமையாகக் கூறப் பட்டன. காஞ்சிப் பெருந்துறை', பஃறுளி ஆறு. anຄ? பொருநை' முதலிய ஆறுகளும் செந்தில் கடற்கரைத் துறை" துறையூர் முன் துறை" ஆகிய துறைகளும் குறிக்கப்படுகின்றன. பொருநை ஆற்றுக் கரையோரத்தில் உள்ள நிலங்களில் விளை யும் நெற்கதிர்களும்' வேங்கடம்", இமயம்’ ஆகிய இடங்களில் பெய்யும் மழையும் உவமைகளாக இடம் பெறுகின்றன.

1.4. எண்ணியல் மரபுகள்

அரசர்களை வாழ்த்துவதற்காக மேற் கூறப்பட்ட பொருள் கள் உவமைகளாகக் கூறப்பட்டன என்பது அக்காலச் சொல்லியல் மரபாக விளங்கியது. மற்றும் இவ் எண்ணிக்கை மரபு இவ் உவமைகளுக்கு மட்டுமின்றி ஏனைய பிற துறைகளுக்கும் பயன்பட்டன என்பது தெரிகின்றது. இதே எண்ணிக்கை அளவால் மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தேர்களும்" யானைகளும், குதிரை க்ளும்' குறிக்கப்பட்டன. இவ்வுலகத்தில் பிறந்து வாழ்ந்தோரின் எண்ணிக்கை கடல் மணலினும் விண்மீனிலும் மிக்கது" என்று கூறுப்படுகிறது. எதிரிகளை வென்று கொண்டு வந்த வேல்களும் புலவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடைப் பொருளாகிய யானைகளுக்கு உவமையாயின." பெண்ணின் கண்ணி வெதிர மலையின் மழைத்துளிகளுக்கு உவமைப் படுத்தப்பட்டது." நட்பு நீண்ட காலம் நிலைபெறுக என்னும் வாழ்த்துச் சேர நாட்டுப்

1. பதி. 48|17-18. 2. புறம். 9/8-13. 3. புறம். 43/21-23. 4. புறம், 387/38 33-36. 5. புறம். 55/17-2. 6. புறம், 136/25-27. 7. புறம். 387/28, 33-36. 8. புறம். 385/10.12. 9. புறம். 37/20-23. 10. புறம். 123/5.6. 11. புறம், 129|5-9. 12. புறம் 42/14-15; 22-23.

13. பு:ம். 363/2-5; பத். 6/235-237, 10/553-556; குறு. 44/3.4. 14. புறம். 130/5-7. 15. புறம். 277/5-6.