பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 85

ஒழுகியது என்று கூறப்படுகிறது. இக்கூற்று நம் உள்ளத்தைத் தொட்டு அவல உணர்வில் ஆழ்த்துகிறது.

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ பெருங்குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே,

-குறு. 325/4-5

1.6.3. 'எனக்குப் பற்றுக் கோடாகிய என் தலைவன் எங்கே இருக்கிறான்? அவனுடைய நினைவு என்னைக் கண்களில் நீர் பெருகச் செய்கின்றது. கண்ணிர் பெருங்குளம் போல் அமைந்துவிட்டது' என்று கூறப்படுகின்றது. இக் கருத்து அகநானூற்றில் வருகின்றது.

அறுகுளம் நிறைக்குந போல அல்கலும் அழுதல் மேவல ஆகி. - Í 1/13-14

1.6.4. கண்களில் துன்பத்தால் பெருக்கும் கண்ணிர் வெம்மையை உடையது. வெமமையை ஆற்றுவதற்கே கண்ணிர் பெருகுவது இயற்கை கண்களில் பெருகும் நீர் கண்ணைத் தீய்த்து விடுவது போன்ற சூட்டைத் தாங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலே முடித்திறக்கும் மெல்லிய இமைகள் தீய்ந்து விடுவதைப் போலக் கண்ணிர் வெம்மை பெற்று விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

மை தீய்ப்பன்ன கண்ணிர். -குறு. 4/2

குறு

1.6.5 தலைமகள் ஒருத்தியின் கண்கள் நீரில் நீந்திச் செல்வதாகக் குறிப்பிடுவது அழகிய சொல்லோவியமாக அமை கின்றது.

நீர் நீந்து கண்ணாள். -கலி. 121/9

1.6.6. கற்பனையும் உணர்வும் மிக்க கூற்று ஒன்று சிறந்த உருவகத்தைத் தாங்கியுள்ளது. கடல் போன்ற பெருக்கை யுடையது கண்ணிர் என்று கூற வேண்டிய உவமையைக் 'கண்ணிர்க்கடல்' என்று கூறுகின்றார். இக்கண்ணிர்க் கடலுள் முழுகி நீர்த் துளியைத் தாங்கித் தலைமகன் முன்னால் மழைத் துளியாக மேகமே நீ வீசக் கூடாதா என்று கூறும் தலைவியின் கூற்று உருவக அழகும், கற்பனை நயமும், உணர்ச்சிப் பெருக்கும், உயர்வு நவிற்சியும் மிக்கதாக விளங்குகின்றது எனக் கூறல் மிகையாகாது.