பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சங்க இலக்கியத்தில் உவமைகள்

கண்ணிர்க் கடலால் கனைதுளி வீசாயோ கொண்முக் குழிஇ முகந்து. -கலி, 145/21-22

இவை பிரிவின் காரணமாக ஏற்பட்ட துன்பத்தை உயர்வு நவிற்சிபடத் தீட்டும் சிறந்த சொல்லோவியங்களாகும்.

1.7. இயல்புபடக் கூறல்

மேல் காட்டியவாறு உணர்வின் பெருக்கால் உள்ளத்தை வியப்பில் ஆழ்த்தத் தக்க உயர்வு நவிற்சிகள் ஆங்காங்கு ஒருசிலவே அமைந்துள்ளன. உள்ளதை உள்ளவாறு சித் திரிக்கும் தன்மை நவிற்சிஅணிகளே மிகுதியாக வழங்கியுள்ளன. உயர்வு நவிற்சிகள் உணர்வுப் பெருக்கால் உயர்வு பெறுகின்றன என்று கொண்டால் தன்மை அணிகள் அவற்றின் இயல்புபடக் கூறும் நுட்ப அழகால் சிறப்புப் பெறுகின்றன. ஒன்றைப் போல ஒன்று நிகர்க்கும் பொருத்தத்தைக் கண்டு உவமை கூறும்பொழுது அப்பொருத்தமே ஒரு தனிச்சிறப்பு ஆக அமைகிறது. இன்ன பொருள் இன்ன பொருளை நிகர்க்கும் என்று கண்டு அறிந்து கூறும் பொழுது அதுவே ஒரு புதிய கண்டுபிடிப்பாக அமைகிறது. விஞ்ஞானிகள் காணும் விஞ்ஞான உண்மையைப் போல அக் கலைஞர்களின் காட்சி விளங்கு கிறது. வருணிக்கப்படும் பொருள்களைக் கவிஞன் எவ்வாறு சுவைக்கின்றான் என்பது இத்தன்மை நவிற்சி வருணனையில் காணப்படுகிறது.

1.7.1. இவற்றுள் சில மரபுவழி பின்பற்றப்படுவதாகும் ஒரு சில அப்புலவர்களின் தனிக் காட்சிகளாக அமைகின்றன. இங்கே சிறப்பாகப் பறவைகளும் விலங்குகளும் செடிகொடி வகைகளும் உவமைப் படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒருசில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்படுகின்றன.

1.7.1.1. கயல்மீன் கண்ணுக்கும். கெண்டை மீன் கண் ணுக்கும்: அரவுப்பல் குராலின் முகைக்கும்’ முதலை மேந்தோல் ஒமைக்கும்' நண்டின் பார்ப்புத் தினையரிசிக்கும் மீன் சினை வெண்மணலுக்கும்." மீன் முள்ளிச் செடிக்கும்’ இறவுச்சினை

1. நற். 220/9; 316/3; குறு. 250/5; 398/3; ஐங். 36,4; பரி. 21/48; 22/29; கலி. 53/10-11; 1.7/8; 145/5; அகம், 129|19; 140/10, 169|12; 313/4. 2. பரி. 16|40. 3. அகம். 237/3. 4. அகம். 3/1-2. 5. பத். 4/167-168. 6. அகம். 286|3. 7. அகம். 26/1-2.