பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 7

4. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கீழ்வருவற்றை இளம்பூரணர் தருகின்றார்.

'முரசுமுழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழா அல்'

- பொருநர், 54-6

என்பது சிறப்புப் பற்றி வந்தது என்றும்,

"ஒவத்தன்ன வியனுடைவரைப்பின்" - புறம் 2526

என்பது நலம் பற்றி வந்தது என்றும்,

'கண்போல்வான் ஒருவன் உளன்' என்பது காதல் பற்றி வந்தது என்றும்,

"அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்'

- பட்டினப். 298

என்பது வலிமை பற்றி வந்தது என்றும் காட்டுவர்

5. இவ் உவமைகளைக் கூறிப் பொருளின் பெருமை யையும் சிறுமையும் உணர்த்தும்பொழுது எண்வகை மெய்ப் பாடுகளின் சுவைகள் மேம்பட்டு விளங்கும் என்பர்.

'பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன் வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப"

-தொல். சூ. 260.

இவ் உவமைகளோடு எண்வகைச் சுவைகளும் கலக்கின்றன என்பது அவர் உணர்த்தும் கருத்தாகும். உவமைகளைக் கூறுவதால் அவற்றின் வழியே உவகை, அவலம், வெகுளி, நகை முதலிய சுவைகளை வெளிப்படுத்த இயல்கின்றது என்பது தெரிகிறது. எனவே உணர்வுமிக்க பாடல்களுக்கு உவமைகள் ஒளி விளக்காக நின்று செய்யுட் செய்திகளை விளக்கப்படுத்துகின்றன எனக் கூறலாம்.

6. உவமைகளை வெளிப்படை உவமை எனவும், குறிப்பு உவமை எனவும் இருவகைப்படுத்தலாம் என்பது தெரிகிறது. மேலே கூறப்பட்ட இலக்கணம் அனைத்தும்

1. "ஒவத்தன்ன இடனுடை வரைப்பு” என்னும் பாடமும் உள்ளது.

2. 'அரிமா அன்ன' என்னும் பாடமும் உள்ளது.