பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - சங்க இலக்கியத்தில் உவமைகள்

உகிருக்கும்' மயிலடி நொச்சி இலைக்கும். சிரல் lpജ്പഥ് வாய் தளவுக்கும். கொக்கு ஆம்பல முகைக்கும்', கொக்கு ஆம்பல் மலருக்கும் கொக்கின் உகிர் நிமிரல் என்னும் அரிசிக்கும் கொக்கின் சிறகு ஆம்பல் இதழ்க்கும் குயிலின் கண் உகாய்க் காய்க்கும். புறாவின் புறப்பகுதி உகாயின் மென்காய்க்கும். புலியினது கண் புதிய தட்டில் இடப்பட்ட வெப்பமான ഇങ്ങഖുഃക്രമ", புலியின் புறவடி வாழைக் குலைக்கும்" முயலின் செவி ஆம்பல் இலைக்கும்", அணிற் பல் முண்டகத்திற்கும்", வெருகுப் பூனையின் விழி முலை யிடை தவழும் முத்துக்கும்", மான்குளம்பு அடும்புக்கும்", யானைச்செவி தாமரை இலைக்கும்' உவமப்படுத்தப் பட்டுள்ளன.

1.7.2. இவ் எடுத்துக்காட்டுகள் பலவும் அவர்கள் உள்ளதை உள்ளவாறு எடுத்துக்காட்டும் தன்மை உவமை யணியின் சிறப்பினைக் காட்டுவதற்காகத் தரப்பட்டுள்ளன. இவை பெருகிய வழக்கு ஆகும். இவ்வாறு நுணுகி எதனையும் கண்டு அதனை நினைவில் வைத்துக் கொண்டு தாம் சொல்ல விரும்பும் பொருள்களோடு தொடர்புபடுத்தி அமைத்தல் சங்க இலக்கிய உவமைகளின் சிறப்பியல்பாகும்.

1.8. சார்த்திக் கூறல் -

வருணிக்கும் பொருள்களும் இயல்புகளும் காலத்தோடும் இடத்தோடும் இயைத்துக் கூறுவது சங்க இலக்கியத் தன்மைகளுள் ஒன்றாகும். அதைப்போல உவமைகளில் கூறப்படும் செய்திகளும் பொருள்களும் காலத்தோடும் இடத்தோடும் தொடர்புபடுத்தல் சங்க இலக்கிய உவமைகளின் சிறப்பியல்புகளுள் ஒன்று ஆகும். சில பொருள்கள் சில ஊர்களோடும் காலத்தோடும் சேரும் பொழுதே அவை உயர்வு பெறுகின்றன. கொற்கை முத்தும், கொல்லிப் பாவையும்,

1. நற். 115/5; 305/2; குறு. 138/3. 2. நற். 6118. 3. நற். 230|2-3; 280/1-2. குறு. 122/-2 4. குறு. 117/1; 122/-2. 5. நற். 258/6; புறம். 395/36; புறம். 398/25.

6. குறு. 122/1-2 7. அகம், 293/4-9, 8. குறு. 27.4/1-2. 9. புறம். 269/4. 10. கலி 43/24-25, 11. நற் 230|1. 12. குறு 49/1. 13. அகம். 73/3-5.

14. குறு. 243/1-2. 15.அகம். 176/4.