பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 33

மாரி ஆம்பல்

மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்று கொக்கு

இருந்ததாகக் கூறுப்படுகின்றது. கொக்கு மாரிக்காலத்தில் நீரால்

நனைந்து காணப்படும் வடிவம் இதில் சிறப்பிக்கப்படுகிறது.

மாரி ஆம்பல் அன்ன கொக்கு. -குறு. 117/1

இக்கருத்து முழுமையும் மாற்றிக் கூறும் இயல்பு மற்றோர் இடத்தில் அமைந்து உள்ளது. மாரிக்காலத்துக் கொக்கின் கூரலகு ஆம்பல் மலருக்கு உவமப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் உவமையும் பொருளும் மாரிக்காலத்துச் சார்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மாரிக் கொக்கின் கூரலகு அன்ன

குண்டுநீர் ஆம்பல். -நற். 100/2-3

மாரி ஈங்கைத் தளிரும் யாத்துத் தளிரும்

தளிர்களுள் ஈங்கையும் யாவும் உவமைகளாக மாரி யோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளன. மாரி ஈங்கையின் கரிய தளிர் போன்ற அழகிய மாமை நிறத்தை உடையதாக மகளிர்மேனி கூறப்பட்டுள்ளது. மாரிக்காலத்து யாத்துத் தனிரும் இதே பொருளுக்கு உவமையாக வந்துள்ளது.

மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன

அம்மா மேனி ஆயிழை மகளிர். -அகம். 337/1-2

சாரல் யாஅத்து உயர்சினை குழைந்த

மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனி, -அகம். 337/1-2

1.8.2.3. தை மாதத்துத் தண்கயமும் பணிச்சுனையும் தை மாதத்துத் தண்கயமும் பணிச்சுனையும் மிகக் குளிர்ந்த பொருள்களாகக் கருதப்பட்டன. தை மாதத்துத் தண்கயத்தில் மகளிர் படிந்து முழுகுதலை இன்பப் பேறாகக் கருதி வந்தனர் என்பது தெரிகிறது.

தை இத்திங்கள் தண்கயம் படியும் -நற். 80/7.9

என்ற தொடர் இக்கருத்தை வற்புறுத்துகிறது.

நறுவி ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து உண்ணிநின பரந்த மார்பே. -ஐங். 84/3-5

என்பது உவமையாகும்.