பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.8.2.4. கூதிர்காலத்துப் பருந்தின் சிறகு கூதிர்க் காலத்தில் பருந்தின் சிறகுகள் ஈரம் படிந்தும் விரிந்தும் கிடக்கும். அதைப் போலக் கிழிந்த கந்தல் ஆடை இருந்தது என்று கூறப்படுகிறது.

கூதிர்ப் பருத்தின் இருஞ்சிறகு அன்ன பாறிய சிறுநோன் சிதா அர். -புறம் 150/1-2

இதே கருத்துப் பதிற்றுப்பத்திலும் அமைந்து கிடக்கிறது. கூதிர்க் காலத்தோடு தொடர்பு படுத்தவில்லையாயினும் அக்கருத்து அதில் பொதிந்து கிடக்கிறது என்பது தெரிகிறது.

நீர்ப்படு பருத்தின் இருஞ்சிறகு அன்ன - நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை -பதி. 12/19-70

1.8.2.5. கொண்டல் பருவத்து அவரை

கொண்டல் என்பது கிழக்குப் பருவக்காற்று வீசும் மழைப்பருவம் ஆகும். அக்கொண்டல் மழை பெய்யும் பருவத்தில் பூக்கும் அவரைப் பூவைப் போல் வெண்மையான மேகங்கள் குன்றினைச் சூழ்வதாகக் குறிப்பிடப் படுகிறது. வெண்மேகங்கள் அவரைப் பூவிற்கு உவமைப்படுத்தப் படுகின்றன.

கொண்டல் அவரைப் பூவின் அன்ன வெண்டலை மாமழை சூடித் தோன்றலானாதவர் மணிநெடுங் குன்றே.

-ஐங். 209/3-5

1.8.2.6. கோடைப்பருத்தி: பருத்தி கோடையில் மிகுதியாக விளையும் என்பதும், அப்பருத்தி மூடைகளைக் கோடைக்காலத்தில் போட்டு அடைப்பர் என்பதும் தெரிகிறது கோடைப் பருத்தியின் மூடைகள் இடம் நிறைத்துக் கொள்வது உவமையாக வந்துள்ளது.

கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் இடம்நிறைத் தன்ன.

-புறம். 393/11-13

மேலே காட்டிய பொருள்கள் காலத்தால் சிறப்புப் பெற்றுள்ளன. தை மாதத்துக்குளம் குளிப்பதற்குத்தண்மையும் இனிமையும் தந்திருக்கின்றது. மாரிக் காலத்து மலர்கள் ஈரம் படிந்து விளங்கின. கிழிந்த கந்தல் ஆடைக்குக் கூதிர்க்காலத்துப்