பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.8.3.2. கொற்கையில் நெய்தல் மலர்: கொற்கைப் பெருந்துறையில் வைகறையில் மலரும் நெய்தல் போலத் தலைவியின் கண்கள் அழகுமிக்க உடையன என்று பேசப் படுகிறது.

கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகைபெரிது உடைய காதலி கண்ணே -ஐங். 188|3-4

இதில் வைகறை மலரும் நெய்தல் என உடன் கூறப் படுகிறது. இடச்சார்பே அன்றிக் காலச்சார்பும் பெற்ற உவமையாக இது விளங்குகிறது.

இதே உவமை கொற்கை முன்துறையோடு சார்பு பெற்று மற்றும் இரண்டிடங்களில் வந்துள்ளது.

முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச் சிறுபா சடைய செப்பூர் நெய்தல் தெண்ணிர் மலரின் தொலைத்த கண்ணே. நற். 23/6-8

நற்றேர் வழுதி கொற்கை முன்துறை

வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தல்

போது புறங்கொடுத்த உண்கண். அகம். 130/11-13

கொற்கை அதனை ஆண்ட வழுதியாலும் சிறப்புப் பொற் றுள்ளமை நற்றேர் வழுதி என்னும் தொடர் அறிவுறுத்து கின்றது.

1.8.3.3. கொல்லி முங்கில்

சேரநாட்டுக் கொல்லி மலை மூங்கிலுக்கும், மயிலுக்கும், அழகிய பாவைக்கும் சிறப்பு வாய்ந்ததாக விளங்கியது என்பது தெரிகிறது.

மகளிர் தோள்கள் கொல்லிமலை மூங்கிலுக்கு உவமைப் படுத்தப்பட்டுள்ளன.

வெல்போர் வானவன் கொல்லி மீமிசை

நுணங்கமை புரையும் வணங்கிறைப் பணைத்தோள்

வெல்போர் வானவன் கொல்லி

வேயொழுக் கன்ன சாயிறைப் பனைத்தோள்

-அகம். 213/15-16