பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சங்க இலக்கியத்

ளார். ஆதலின், புன்னாகம் என்பது புன்னையின் வேறாகிய சுரபுன்னையாதல் கூடும். மேலும், சூடாமணி நிகண்டு கூறியுள்ள வண்ணம் நாகமாதலுங் கூடும்.

‘நாகம்’ எனப்படும், சுரபுன்னையைப் பற்றிப் புலவர் பெருமக்கள் கூறியுள்ளவற்றை உற்று நோக்கினால், ‘நாகம்’ என்பது ‘சுரபுன்னை’ எனவும், புன்னாகம் எனவும் கூறப்படுமாறு காணலாம்.

புலவர் பெருமக்கள் கூறும் இதன் இயல்புகளாவன:

  1. நெருங்கிய கொம்புகளிடத்தே நறிய பூக்கள் நெருங்கியுள்ளன;
  2. மலையின் உச்சியில் உண்டான சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிரும்;
  3. நாக மரம் நெடிது வளரும்;
  4. சுரபுன்னைப் பூவால் கட்டிய மாலையை ஆடவரும் அணிந்தனர்;
  5. பாலையின் நெடிய வழியிலே சுரபுன்னை மரம் பூக்கும்; மலர்கள் சுரும்பு உண்ணும்படி நறிய தேனைத் துளிக்கும்;
  6. நாகமரம், அகில், சந்தனம் முதலிய மரங்களோடு மலையிடத்துச் சுரத்திலும் வளரும்.