பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பாரம்-பருத்தி
காசிப்பியம் ஹெர்பேசியம் (Gossypium herbaceum,Linn.)

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்று கபிலர் கூறும் குறிஞ்சிப் பாட்டடியில் (92) காணப்படும் ‘பாரம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பருத்திப்பூ’ என்று உரை கண்டார்.

பருத்தி ஒரு சிறு செடி. இதன் மலர் செந்நிறமானது. இதன் விதைகளில் உட்புறத்தோலில் வளரும் மெல்லிய இழைகளே பருத்திப் பஞ்சு ஆகும். இதனைக் கொண்டுதான் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : பாரம்
உலக வழக்குப் பெயர் : பருத்தி
தாவரப் பெயர் : காசிப்பியம் ஹெர்பேசியம்
(Gossypium herbaceum.,Linn.)

பாரம்-பருத்தி இலக்கியம்

‘பாரம் பீரம் பைங்குருக்கத்தி’ என்பது கபிலர் வாய் மொழி (குறிஞ். 92). பாரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பருத்திப் பூ’ என்று உரை கூறியுள்ளார். பருத்தியின் பஞ்சு மூடைகள் பற்றிப் புறநானூறு கூறும் :

“கோடைப் பருத்தி வீடுநிறை பெயத்
 மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன

-புறநா. 393: 12-13


(பருத்தி வீடு = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு)

பாரம் என்னும் பருத்திப் பெயரில் ஓர் ஊர். மிஞிலி என்பவனுக்குரியது என்பர் கபிலர். ‘மிஞிலி காக்கும் பாரத் தன்ன’ (நற். 265:4-5). பருத்தியூர் எனவும் இக்காலத்தில் ஊர்ப்பெயர்