பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



113

உள்ளது. பருத்திப் பஞ்சின் நூலை நூற்கும் பெண்டிரைப் பற்றிப் பேரிசாத்தன். பேசுகின்றார் :

“பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
 நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை”

-புறநா. 125 : 1-2


இதற்குப் ‘பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற’ என்று உரை கூறுவர். நீறு பூத்த நிணத்திற்குப் பருத்திப் பஞ்சு உவமை கூறப்படுகின்றமை நோக்குதற்குரித்து (புறநா. 393).



பாரம்–பருத்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே; மால்வேலீஸ் அகவிதழ் இணையாதவை.
தாவரக் குடும்பம் : மால்வேசி (Malvaceae)
தாவரப் பேரினப் பெயர் : காசிபியம் (Gossypium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஹெர்பேசியம் (herbaceum)
தாவர இயல்பு : செடி கிளைத்துத் தழைத்து வளரும்; கரிய நிற மண்ணில் நன்கு வளரும்; 2-3 அடி உயரம்; பெரிதும் பயிரிடப்படுகிறது.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அகன்ற தனியிலை; கையன்ன நரம்புகள்; இலை விளிம்பு பல. அகன்ற ஆழமான மெல்லிய இலையடிச் சிறு செதில்கள் பெரியவை; இலைக் கோணத்தில் பெரிய ஐந்தடுக்கான மஞ்சள் நிற மலர் கவர்ச்சியாகக் காணப்படும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள். பசியவை அடியில் இணைந்திருக்கும்.
 

73-8