பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

115

அல்லி வட்டம் : (கல்வலூட்) நேருக்கு நேரான அடுக்கில் 5 அகன்ற மெல்லிய இதழ்கள் எடுப்பானவை.
மகரந்த வட்டம் : பல குட்டையான தாதிழைகள். ஒரு குழல் வடிவான தாதுக் காம்பில் சுற்றிலும் ஒட்டியிருக்கும்; தாதுப்பை ஒன்றுதான்; சிறுநீரக வடிவானது.
மகரந்தம் : பல தாதுக்கள் உண்டாகும் தாதுப்பையின் வெளிப்புறமாக வெடித்து வெளிப்படும். தாதுவின் வெளியுறையில் (எக்சைன்) நுண்ணிய முட்கள் உள்ளன.
சூலக வட்டம் : 2 சூலிலைச் சூலகம்; பல சூல்கள்; சூல் தண்டு மகரந்தக் குழலின் உள்ளேயிருக்கும்; சூல்முடி குல்லாய் போன்றது.
வித்திலை : இரண்டும் மடிந்திருக்கும்; விதைக் கரு வளைந்தது.

காசிபியம் பார்படேன்ஸ் (Gossypium barbedense) என்பதை சீ அயலண்டு பருத்தி (sea island cotton) எனவும், காசிபியம் பெருவியானம் (Gossypium peruvianum) தென்அமெரிக்கப் பருத்தி எனவும், காசிபியம் ஹிர்சூட்டம் என்பதை (Gossypium hirsutum) ஷார்ட் ஸடேபிள் பருத்தி (short staple cotton) எனவும் கூறுவர். இவை அனைத்தும் அமெரிக்க நாட்டினது என்பர். காசிபியம் ஹெர்பேசியம் (Gossypium herbaceum) கருங்கண்ணிப் பருத்தி என்றும், இது கிழக்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தது என்றும் கூறுவர். காசிபியம் ஆர்போரிட்டம் (Gossypium arboretum) என்ற மரப் பருத்தி (Tree cotton) ஆப்பிரிக்காவில் வெப்பப் பகுதியைச் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். பருத்திப் பஞ்சு மிகவும் துல்லியமான செல்லுலோஸ் ஆகும். பருத்திச் செடி வெப்ப நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. பருத்திப் பஞ்சு ஆடைகள் நெய்வதற்குப் பயன்படுதலின் பெரிதும் பயிரிடப்படுகின்றது. இக்காலத்தில் இந்தியப் பருத்தியை அமெரிக்கப் பருத்திச் செடிகளில் செயற்கை முறையில் இணைத்துப் புதுப் புதுப் பருத்திப் பரம்பரைகளை உருவாக்கியுள்ளனர்.

பருத்திச் செடி தொன்று தொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பற்றிய செய்திகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. வேளாண்மைத் துறையினர் பருத்திச் செடி-