பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

இலவம்

பாம்பாக்ஸ் மலபாரிக்கம் (Bombax malabaricum,D.C.)

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இலவமரம் செந்நிறமான பூக்களை உடையது. நெடிது உயர்ந்து வளர்ந்த கிளைகளை உடையது: மரத்தில் குவிந்த முட்டு முட்டான தடித்த முட்கள் இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : இலவு, இலவம்.
உலக வழக்குப் பெயர் : முள்ளிலவு இலவம், பஞ்சுமரம்.
தாவரப் பெயர் : பாம்பாக்ஸ் மலபாரிக்கம்
(Bombax malabaricum,D.C.)
ஆங்கிலப் பெயர் : ரெட் சில்க் காட்டன் மரம் (Red Silk Cotton tree)

இலவம் இலக்கியம்

இதில் உண்டாகும் பஞ்சைக் காட்டிலும் மென்மையும் பளபளப்பும் குளிர்ச்சியும் உடைய பஞ்சு தரும் இலவ மரமொன்று உண்டு. அதற்கு ஆஙகிலத்தில் (White Silk Cotton tree) வொயிட் சில்க் காட்டன் மரம் என்று பெயர். இம்மரமும் ஓங்கி வளரும் இயல்புடையது. மேற்புறத்துக் கணுக்களில் நான்கு புறமும் கவிந்த கிளைகளை விடுவது. வெளிர் மஞ்சள் நிறமான பூக்களை அவிழ்ப்பது. முதிராத இதன் அடிமரத்தில் தடித்த குவிந்த முட்கள் இருக்கும். இதற்குத் தாவரவியலில் எரியோடெண்ட்ரான் பென்டான்ட்ரம் (Eriodentron pentandrum, Kurz) என்று பெயர்.

சங்க இலக்கியங்கள் கூறும் ‘இலவம்’ என்பது நெருப்பு போலும் சிவந்த நிறமுள்ள மலர்களையுடைய பெரிய மரம். இக்காலத்தில் இதனை ‘முள்ளிலவு’ என்று கூறுவர். இம்மரத்தின் பூ குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிமரம் நீளமானது. பருத்து வளர்வது: பட்ரெஸ் (Butress) என்ற