பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நரந்தம்–பூ
சிட்ரஸ் மெடிகா (Citrus medica,Linn.)

“நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி” என்று கபிலர் கூறும் குறிஞ்சிப் பாட்டில் (94) உள்ள ‘நரந்தம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘நாரத்தம்பூ’ என்றும், கலித்தொகையில் காணப்படும் ‘நரந்தம்’ என்ற சொல்லுக்கு (54:5) நரந்தம்பூ என்றும் உரை கண்டார்.

நாரத்தை’ என வழங்கும் இச்சிறுமரத்தில் வெள்ளிய பூக்கள் கொத்தாக மலரும். இதன் கனிக்காக இது வளர்க்கப்படும். இதில் இந்நாளில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள். கன்னட நாட்டில் உள்ள சிக்மகளூருக்கருகில் உள்ள மைய அரசின் ஆய்வுப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : நரந்தம்
பிற்கால இலக்கியப் பெயர் : நாரத்து, நாரத்தை
உலக வழக்குப் பெயர் : நாரத்தை
தாவரப் பெயர் : சிட்ரஸ் மெடிகா
(Citrus medica,Linn.)

நரந்தம்–பூ இலக்கியம்

“நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி” என்பது கபிலர் வாக்கு (குறிஞ்:94) இவ்வடியில் உள்ள ‘நரந்தம்’ என்பதற்கு ‘நாரத்தம்பூ’ என்று உரை கண்டார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இவரே கலித்தொகையில் வரும் இச்சொல்லுக்கு “நாரத்தம்பூ” என்பார். நாரத்தையின் இலக்கியச் சொல் ‘நரந்தம்’ என்பது மருவி நாரத்தை என்றாயிற்று போலும். சிலப்பதிகாரத்தில்[1] அடியார்க்கு


  1. சிலப் : மதுரைக். 12 : 2