பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சங்க இலக்கியத்

நேர் நேர் நிரை தேமாங் கனி
நிரை நேர் நிரை புளிமாங் கனி

மூவசைச் சீரில் இவை கனிச் சீர் எனவும், வஞ்சிச் சீர் எனவும் கூறப்படும்.

நேர் நேர் நேர் நேர் தேமாந் தண் பூ
நிரை நேர் நேர் நேர் புளிமாந் தண் பூ
நேர் நேர் நிரை நேர் தேமா நறும்பூ
நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ
நேர் நேர் நேர் நிரை தேமாந் தண்ணிழல்
நிரை நேர் நேர் நிரை புளிமாந் தண்ணிழல்
நேர் நேர் நிரை நிரை தேமா நறுநிழல்
நிரை நேர் நிரை நிரை புளிமா நறுநிழல்

இவை நான்கசைச் சீர்க்குரிய வாய்பாடுகளாகும். இங்ஙனமாகத் தேமாவும், புளிமாவும் பயிலப்படுகின்றன.

இவற்றுள் புளிமாவாகிய ‘அவர்கோயா பிலிம்பி’ இந்தியாவிலும், மலேசியா, பர்மா, இந்தோசைனா, இலங்கை முதலியவிடங்களிலும் வளர்கின்றது. ‘அவர்கோயா’ என்ற இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. புளிமா மரம் சற்றேறக் குறைய இருபது முதல் நாற்பது அடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது அரிநெல்லி மரத்தைப் போன்றது. இலைகளும் அப்படியே இருக்கும். இதன் இலைகள் 5 முதல் 17 வரை சிற்றிலைகளை உடைய கூட்டிலைகளாகும். இக்கூட்டிலைகள் கலித்தும், மிகுத்தும் காணப்படும். காய்கள் நான்கு பட்டை உடையன. 5-6 செ. மீ. நீளமும், 3.5 முதல் 5 செ.மீ. அகலமும் இருக்கும். இக்காயில் உள்ள ஒரு வகையான அமிலம் (acid) மிகுந்த புளிப்பாக இருக்கும். இப்புளிமாங்காய்க்கெனவே இம்மரம் பல்வேறிடங்களில் பயிரிடப்படுகின்றது. உணவுக்குச் சாறு கூட்டும் போது புளிக்குப் பதிலாக இக்காய் பயன்படுகிறது. புளியாரை எனப்படும் செடிக்கு ஆக்சாலிஸ் கார்னிகுலேட்டா என்று பெயர். இதுவும் புளிமாவின் குடும்பத்தைச் சேர்ந்தது.

இச்சிறு மரத்தின் இலைகள் செழுமையுடன் மிகுந்தும், மலிந்தும் காணப்படுதலின், இதனைக் கலிமா என்றழைத்தனரோ என்று எண்ண இடந்தருகின்றது. ‘கடிகமழ் கலிமா’ என்று இதனைக் கபிலர் குறிப்பிடுவதும் ஈண்டு நோக்கற்பாலது. தேமா