பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முருங்கை
மொரிங்கா டெரிகோஸ்பர்மா
(Moringa pterygosperma,Geartn.)

அகநானூற்றில் மூன்று பாக்களில் முருங்கை மரம் பேசப்படுகிறது. இம்மரத்தை ‘நாரில் முருங்கை’ என்று இதனுடைய தாவரவியலுண்மையைச் சங்க இலக்கியம் வெளியிடுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : முருங்கை
உலக வழக்குப் பெயர் : முருங்கை
தாவரப் பெயர் : மொரிங்கா டெரிகோஸ்பர்மா
(Moringa pterygosperma,Geartn.)

‘முருங்கை’யை ‘மொரிங்கா’ என்று தாவரவியலார் தமிழ்ச் சொல்லையே கையாண்டுள்ளதைக் காண்மின்!

முருங்கை இலக்கியம்

இம்மலரின் புல்லி வட்டம் 5 புறவிதழ்களைக் கொண்டதென்றும், இவை ஐந்தும் ஒரு குழல் போன்று இணைந்துள்ளன என்றும் பல அறிஞர்கள் கூறுமாப் போல, இவை அமைந்துள்ளன. இதன் பூத்தளம் கிண்ணம் போன்றுள்ளது. கிண்ணத்தின் மேல் விளிம்பில் புல்லி, அல்லி, மகரந்தக் கால்கள் எல்லாம் ஒட்டியுள்ளன. இவற்றைக் கொண்டு புல்லி வட்டத்தில் குழல் போன்ற இவ்வமைப்பு பூத்தளத்தின் குழிந்த பகுதி என்றும், புல்லி, அல்லி, மகரந்தக் கால்கள் எல்லாம் இணைந்துள்ள கிண்ணத்தின் மேற்பகுதி உள்வளைந்ததோர் தொங்கும் பகுதி என்றும், கிண்ணம் போன்ற இவ்வமைப்பை ஹைபந்தியம் (Hypanthium) என்றும் பூரி (1942) என்பவர் கருதுகின்றார். சூலகத்தைப் பற்றிய இவரது கருத்து, ஓரறையுள்ள மூவிலைச் சூலகம் மூன்று சூல்தட்டு திசுக்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சூல் ஒட்டுத் திசுவிலும்