பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

191

மென்பதை, வடமொழி, சிங்களம் போன்ற வேற்று மொழிச் சொல்லன்று என எதிர்மறையால் வலியுறுத்தியும் கவிஞர் கோவை இளஞ்சேரனார் அழகுற விளக்கியுள்ளார்.[1]

ஆகவே, முருங்கை மரம் நீரற்று, வறண்டு போன பாலை நிலத்தில் வளருமென்பதும், வெள்ளிய பூக்களை உடையதென்பதும், புல்லிய நீண்ட கிளைகளை உடையதென்பதும், மரத்தில் நார்த் திசு இல்லை என்று தாவர இயல் உண்மையைக் கூறுவதும், சங்க இலக்கியத்தில் தாவர அறிவியற் கூற்றுகள் எனலாம்.

முருங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிஃபுளோரே (Tnalamiflorae)
தாவரக் குடும்பம் : மொரிங்கேசி (Moringaceae)
தாவரப் பேரினப் பெயர் : மொரிங்கா (Moringa) (ஒரே ஒரு பேரினத்தை மட்டும் உடைய குடும்பம் )
தாவரச் சிற்றினப் பெயர் : டெரிகோஸ்பர்மா (pterygosperma)
சங்க இலக்கியப் பெயர் : முருங்கை
தாவர இயல்பு : மரம்
மண் இயல்பு : மீசோபைட் (Mesophyte)
வளருமியல்பு : 20 முதல் 30 அடி வரை உயர்ந்து, நன்கு கிளைத்துப் பரவி வளரும். இலையுதிர் மரம். வெப்பம் மிக்க பழைய உலகைச் சேர்ந்தது. புதிய உலகின் வெப்பம் மிக்க பலவிடங்களில் வளர்கிறது. கலிபோர்னியா, பிளாரிடா நாடுகளின் தென் பகுதியில் வளர்க்கப்படுகிறது. வட இந்தியாவில் தானே மிகுந்து வளர்கிறது. தென்னிந்தியா முழுவதிலும் வளர்க்கப்படுகிறது.
 

  1. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 741