இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
236
தாவரச் சிற்றினப் பெயர் | : | பைபுளோரஸ் (biflorus) |
சங்க இலக்கியப் பெயர் | : | கொள் |
உலக வழக்குப் பெயர் | : | கொள்ளுச் செடி |
ஆங்கிலப் பெயர் | : | (Horse gram) |
தாவர இயல்பு | : | சிறு செடியாக வளர்ந்து பின்னர், வயல்களில் படர்ந்து வளரும் ஓராண்டுக் கொடி. |
இலை | : | 2-3 சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் 1-3 மஞ்சள் நிற மலர்களைக் காணலாம். |
மலர் | : | மஞ்சள் நிறமானது. அவரைப்பூப் போன்றது. |
புல்லி வட்டம் | : | மெல்லிய மயிரிழைகள் மலிந்த பசிய குழல் வடிவானது. 5 புறவிதழ்களில் மேற்புறமுள்ள இரண்டும் சற்றுக் கூம்பு போன்றவை. |
அல்லி வட்டம் | : | பளபளப்பான பதாகை இதழ். இரு பக்கங்களிலுமுள்ள சிறகிதழ்கள் குறுகியவை. |
மகரந்த வட்டம் | : | 10 தாதிழைகள் (1-1-9) என்ற முறையில் இருக்கும். |
சூலக வட்டம் | : | 1 செல்; பல சூல்கள். |
கனி | : | நீளமானது. 1.5-2 அங்குல நீளமும், 0.25 அங்குல அகலமும் உள்ள பசிய காய் 5-6 விதைகளை உடையது. |
விதை | : | சற்றுத் தட்டையானது. இதன் விதைகளுக்காக இச்செடி பயிரிடப்படுகிறது. இச்செடி ஆடு மாடுகளுக்கு நல்ல உணவுச் செடி. |
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=20 என சென், என். கே. வித்யாபூஷன் (1959), பிரிட்சார்டு, ஏ. ஜே. கௌல்டு (1964) என்போர் கணக்கிட்டுள்ளனர்.