பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293
 

மாரிஈங்கை மாத்தளிர் அன்ன -அகநா. 7.5:1:7

'ஈங்கை' என்பதற்கு, இண்டு, இண்டை' என்று உரை கூறுவர்.

ஈங்கை இலவம் தூங்கினர்க் கொன்றை -குறிஞ். 86

என்ற அடியில் உள்ள ஈங்கை என்பதற்கு நச்சினார்க்கினியர் 'இண்டம்பூ' என்று உரை கண்டுள்ளார்.

ஈங்கை தாவர அறிவியல்
தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளேரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : மைமோசாய்டியே
தாவரப் பேரினப் பெயர் : மைமோசா (Mimosa)
தாவரச் சிற்றிரினப் பெயர் : ரூபிகாஸிஸ் (rubicaulis)
சங்க இலக்கியப் பெயர் : ஈங்கை
உலக வழக்குப் பெயர் : இண்டு, இண்டை, இண்டங்கொடி
தாவர இயல்பு : புதர்கொடி, நீண்டு வளரும், இக்கொடியியல் வளைந்த முட்கள் செறிந்திருக்கும்.
இலை : கூட்டிலை, 10-15 இறகன்ன பிரிவுடையது. சிற்றிலைகள் சிறியவை 0. 5.-0.7 அங்குலம் நீளமானவை. இலைக்காம்பில் முட்கள் இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் தனிக்கொத்தாக உண்டாகும். எனினும் நுனியியல் நுனி வளர் பூந்துணராகிடும்.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. 4 புற விதழ்கள் இணைந்தவை.
அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள் மேலே தனித்தினி பிரிந்து காணப்படும்.அடியில் இணைந்திருக்கும்.