இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“தாமே ஆண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே”-புறநா. 363 : 1-4
இதன் இலை கூட்டிலை ஆகும். சிற்றிலைகள் மிகச் சிறியவை. இது ஒரு வகை வேலமரமாகும் என்று பிங்கல நிகண்டு கூறும்; இம் மரம் சிறு குடைபோலப் பரவிக் கிளைத்துத் தழைத்திருக்கும். ஆதலின், இதனைக் குடை வேல மரமென்றனர் போலும்.
உடை தாவர அறிவியல்
| தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
| தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflorae) |
| தாவரக் குடும்பம் | : | லெகுமினோசி (Leguminosae) |
| தாவரத் துணைக் குடும்பம் | : | மைமோசாய்டியே (Mimosoideae) |
| தாவரப் பேரினப் பெயர் | : | அக்கேசியா (Acacia) |
| தாவரச் சிற்றினப் பெயர் | : | பிளானிபிரான்ஸ் (Plaifrons) |
| சங்க இலக்கியப் பெயர் | : | உடை |
| உலக வழக்குப் பெயர் | : | ‘ஓடை’ என்பார் காம்பிள் |
| பிற்கால இலக்கியப் பெயர் | : | குடைவேலம் |
| ஆங்கிலப் பெயர் | : | பாபுல் (Babul)(Umbrella-thornbabul) |
| தாவர இயல்பு | : | சிறு மரம்; குடை போலக் கவிழ்ந்து கிளை பரப்பித் தழைத்த முடியுடையது; |
| இலை | : | கூட்டிலை, 1 அங்குலத்திற்கும் குறைவான நீளமுடையது; சிற்றிலைகள் 3-4 இணைகள் சிறகு வடிவில்–சிற்றிலைகள் (.06×.01) அங்குலம்–மிகச் சிறியவை. இலைச் செதில்கள் இரண்டும் இரு நீளமான வலிய முட்களாக மாறியிருக்கும். |