பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சங்க இலக்கியத்

பெற்ற ‘திருவளர் தாமரை’ இப்பேரினத்தைச் சார்ந்தது. அதனால், தாமரைக்கு நிலம்பியம் ஸ்பீசியோசம் (Nelumbium Speciosum) என்று பெயர். நிம்பேயா, நிலம்பியம் என்னும் இவ்விரு பேரினங்களைச் சார்ந்த மலர்கள் நம் தமிழ்நாட்டில் வளர்வதால் காம்பிள் (Gamble) என்பவர் தமது நூலில், இத் தாவரக் குடும்பத்தில் பன்னிரு பேரினங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் நிம்பேயா என்ற பேரினத்தில் நிம்பேயா பூபெசென்ஸ் (Nymphaea pubescens) எனப்படும் ஆம்பல் விவரிக்கப்பட்டுள்ளது.

“ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்”

என்பர் கபிலர்

-குறிஞ். 62
ஆம்பல் என்னுஞ்சொல் ஆம்பல் மலரையன்றி, ஆம்பற்பண்ணையும் ஆம்பற் குழலையும், பேரெண்ணையும் குறிக்கும்.

“ஆம்பலந் தீங்குழல் தெள்விளி பயிற்ற”-குறிஞ். 222
“ஆம்பற் குழலால் பயிர்பயிர்”-கலி. 108:62

என வரும் அடிகட்கு ‘ஆம்பல் என்னும் பண்ணையுடைய குழலாலே’ என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறினார்.

“பையுள் செய்யாம்பலும்”[1]

என்பதற்கு, ஆம்பற் பண்ணையுடைய குழல் என்றும்

“உயிர் மேல் ஆம்பல் உலாய்”[2]

என்னுமிடத்து, ‘ஆம்பல் என்னும் பண் சுற்றிலேயுலாவி’ என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறினார்.

“ஆம்பலந் தீங்குழல் கேளாமோ”

என்றவிடத்து அரும் பதவுரையாசிரியர் ‘ஆம்பல் முதலானவை சில கருவி:ஆம்பல் பண்ணுமாம்: மொழியாம்பல், வாயாம்பல், முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு’ என்றார்: அடியார்க்கு நல்லார், ‘ஆம்பற்பண் என்பாரை மறுத்து வெண் கலத்தால் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த குழல்’ என்று கூறா நிற்பர்.

“ஆம்பலங் குழலின் ஏங்கி”-நற். 113

என்பதற்குப் பின்னத்துரார். அடியார்க்கு நல்லாரைப் பின்பற்றி


  1. சீ. சிந். 1314
  2. சீ. சிந் . 1662