பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சங்க இலக்கியத்

உண்ணுதல்’ என்றும் கூறுவதுண்டு (நற். 304; கலி. 15). இதனால் மகளிர்க்கு இளநலத்தால் ஓங்கும் வளமிகு கவின் அழிந்தொழியும் (குறுந். 368). மேலும், பிரிவிடை ஆற்றாத தலைவி நொந்துரைக்கிறாள், ‘எனது மாமையாகிய பேரழகை, எனக்கு அழகு தந்து நிற்கவொட்டாமலும், என் தலைவனுக்குக் காட்சியின்பம் பயக்கவொட்டாமலும், பசலையானது, தான் உண்ண விரும்புகின்றதே!’ என்று.

“எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
 பசலை உணீஇயர் வேண்டும்
 திதலை அல்குல் என்மாமைக் கவினே”
-குறு. 27:3-5

(திதலை - தேமல்; சுணங்கெனவும் படும். அல்குல் - மகளின் உந்திக்கும். குறிக்கும் இடைப்பட்ட பகுதி).

ஆம்பலின் பூக்காம்பை ஒடித்து மணிமாலை போலாக்கி மகளிர் வளையலாக அணிவர்.

“ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்”

-புறநா: 63:12, 352: 5

ஆம்பற் பூவில் நான்கு புறவிதழ்களும், பத்துப் பதினைந்து அகவிதழ்களும் உள்ளன. புறவிதழ்களின் வெளிப்புறம், பசுமையானது. மாலையில் கூம்பிய ஆம்பலின் மலருக்குக் கொக்கின் பசிய புறம் உவமிக்கப்படுகின்றது.

“பைங்காற் கொக்கின் புன்புறத்தன்ன
 குண்டுநீராம்பலும் கூம்பின”
-குறுந்: 122:1-2

“ஆம்பற்பூவின் சாம்பலன்ன
 கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ”
-குறுந்: 46:1-2

ஆம்பலில் இருவகை உண்டு. ஒன்று வெள்ளாம்பல் (நற். 290) மற்றொன்று செவ்வாம்பல். இது அரக்காம்பல் எனவுங் கூறப்படும். வெள்ளாம்பற்பூவில் உள்ள புறவிதழின் உட்பாகம் வெண்மையாகவும், செவ்வாம்பலில் சிவப்பாகவும் இருக்கும். ஆம்பலில் பொதுவாகப் புறவிதழும், அகவிதழும் இணைந்து, ஒன்றாக இருக்குமாயின் இவ்விதழ்த் தொகுதியைத் தாவர நூலில் அல்லி (Perianth) என்பர்.

‘அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்’ (கலி. 91:1) என்ற அடிக்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘அழகிய நீரில் அலர்ந்த