இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
357
புல்லி வட்டம் | : | அல்லிக்குழல் அடி ஒட்டியது. மேலே 4-10 பற்கள் போன்றது. பிரிவு உடையது. |
அல்லி வட்டம் | : | 4-10 நீண்ட அகவிதழ்கள் தடித்தவை மலரில் பின்புறமாக மடிந்திருக்கும். |
மகரந்த வட்டம் | : | அகவிதழ்களில் 2–4 மடங்கு எண்ணிக்கையான தாதிழைகளை உடையது. அகவிதழ்களை ஒட்டியிருக்கும். தாதிழைகள் மேலே பிரிந்துள்ளன. தாதுப்பை நீளமானது. |
சூலக வட்டம் | : | மலர் வட்டங்களுக்குக் கீழானது. இரு சூலகம். சூல்தண்டு நீளமானது. சூல்முடி அகன்ற குல்லாய் போன்றது. சூலறையில் சூல்கள் தனித்திருக்கும். |
கனி | : | 2 விதைகளை உடைய பெர்ரி என்ற சதைக் கனி புல்லி வட்டத்தால் மூடப் பெற்றிருக்கும். |
விதை | : | விதையுறை அழுத்தமானது. ஆல்புமின் சதைப்பற்றானது. சூலிலைகள் இலை போன்றவை. பட்டையானவை. சூல்முளை நீளமானது. |
இத்தாவரக் குடும்பத்தில் அலஞ்சியம் என்ற ஒரு பேரினமே தமிழ் நாட்டில் வளர்கிறது. இதில் 2 சிற்றினங்கள் உள்ளன. இதன் மரம் மஞ்சள் நிறமானது மர வேலைப்பாடுகளுக்கேற்றது.