பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

சங்க இலக்கியத்

அவ்வூர்த் தலைவன் நெடுங்கை வேண்மான். அவனால் இவ்வூர் காக்கப்பட்டு வந்தது. இச்செய்தியை நக்கீரர் கூறுகின்றார்.

“. . . .. . . .. . . . உறந்தைக் குணாஅது
 நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்”

-புறநா. 395 : 19-20


நறுமணமுள்ள இதன் மலர்க் கொத்தை மகளிர் அணிந்து கொள்வர்.

பிடஉ தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Infarae) அகவிதழ் இணைந்தது.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரண்டியா (Randia)
தாவரச் சிற்றினப் பெயர் : மலபாரிகா (malabarica, Lam.)
தாவர வளரியல்பு : வறண்ட நிலத் தாவரம்.
தாவர இயல்பு : புதர்ச்செடி. அடர்ந்தும், பரந்தும், கிளைத்தும், உயர்ந்தும் வளரும். வலிய தண்டுடையது. சிறு மரம் போலத் தோன்றும். அடி முதல் நுனி வரை இலைக் கோணத்தில் முட்கள் உடையது.
இலை : 1-3 அங்குல நீண்ட இலைகள் எதிரடுக்கில் உள்ளன. பளபளப்பானது. தோல் போன்றது. கணுவிலுள்ள இரு இலைகளில் ஒன்று பெரிதும் வளர்வதில்லை. இலைக்கோணத்தில் இரு சிறு முட்கள் வளரும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் ‘காரிம்ப்’ வகையான ‘அம்பல்’ எனப்படும் நுனி