பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பித்திகம்
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)

இதனைப் பித்திகம், பிச்சிப்பூ எனவும் வழங்குவர். இதன் அரும்பு சிவந்த புறத்தை உடையதென்றும், பசிய காலை உடையதென்றும் புலவர்கள் கூறுவர். இது முல்லையினத்தைச் சேர்ந்தது. இதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மலர் மிகுந்த மணமுடையது. இந்நாளில் இதனைப் பிச்சிப்பூ என்று கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : பித்திகம், தளவம்
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)
உலக வழக்குப் பெயர் : பிச்சிப்பூ, பிச்சி

பித்திகம் இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் தலைவன் பித்திகத்து (பிச்சியினுடைய) அழகிய இதழ்களை உடைய பூவைத் தொடுத்த அழகினை உடைய தொடையாகிய ஒரு வடத்தைச் சுற்றிக் கொண்டு வருகிறான் என்பர் கபிலர்.

“பைங்காற் பித்திகத்து ஆயிதழ் அலரி
 அந்தொடை ஒருகாழ் வளைஇ
-குறிஞ். 117-118

“வஞ்சி பித்திகம் சிந்து வாரம்-குறிஞ். 89

‘பித்திகத்து’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பிச்சியினது’ என்றும் ‘பித்திகம்’ என்பதற்குப் ‘பிச்சிப்பூ’ என்றும் உரை கூறினார். சங்கப் பாடல்களில் பித்திகம் என்ற சொல்லே பெரிதும் பயிலப்படுகின்றதாயினும், பித்திகை என்றும் குறிப்பிடப்படுகின்றது. ‘பித்திகம்’, முல்லை இனத்தைச் சார்ந்தது: செவ்விய