பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

சங்க இலக்கியத்

என்பனவற்றைத் தனித் தனியே பாடுவதையும் காணலாம். இலக்கியங்களில் மௌவல் முல்லையைப் போலவே பேசப்படும். அதனால், மௌவல் என்பது முல்லையாக மாட்டாது. மௌவல் நிறத்தாலும், மணத்தாலும் முல்லையைப் போன்றதாகும். இரண்டும் மனைகளிலே வளர்க்கப்படும் கொடிகளே. எனினும், முல்லை ‘மனைவளர் முல்லை’ எனச் சங்க இலக்கியங்களில் பேசப்படும் அளவிற்கு, மௌவல் குறிப்பிடப்படவில்லை.

மற்று, பிங்கலமும் , சூடாமணியும் இதனை ‘வனமல்லிகை’ என்கின்றன. மௌவல் ஒரு மல்லிகையினத்தைச் சேர்ந்த கொடி. இதனைச் சங்க நூல்களில்,

“மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
 துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்”

-அகநா. 21 : 1-2
“. . . . . . . . . . . . மனைய
 தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
 மௌவல் மாச்சினை காட்டி
 அவ்வளவு என்றார் ஆண்டுசெய் பொருளே”

- அகநா. 23 : 10-13
“. . . . . . . . மனை மரத்து
 எல்லுறு மௌவல் நாறும்”
-குறுந் 19 : 3-4

“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
 மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழ”

-நற். 115 : 5-6
“மண மௌவல் முகை யன்ன
 மாவீழ் வார் நிரை வெண்பல்”
-கலி. 14 : 3

“மாதரார் முறுவல் போல்
 மண மௌவல் முகை பூழ்ப்ப”
-கலி. 27 : 4

என வரும் இப்பாக்களைக் கூர்ந்து நோக்கினால் மௌவல், மனையிடத்தே உள்ள மரத்தில் மேலேறிப் படர்ந்து வளரும் பெரிய கொடி என்பதும், நொச்சியுடனே வளர்ந்து நொச்சி மரத்தில் ஏறிப் படர்ந்து முகை விடும் என்பதும், இதன் அரும்புகள் மகளிரின் வெள்ளிய பற்களை ஒத்தவை என்பதும்,