பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

சங்க இலக்கியத்

மௌவல் நல்லதொரு நறுமணமுள்ள வெண்ணிற மலர் என்பதும் புலனாகும்.இத்தகைய இதன் இயல்புகளைப் பார்த்தால், இதனை மனை மல்லிகை என்று சொல்லும் உலக வழக்குப் பெயர் இதற்குப் பொருத்தமாக உள்ளது.

மௌவல் (மனை மல்லிகை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : செசிபுளோரம் (sessiflorum,Vahl.)
தாவர இயல்பு : ஏறுகொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 10-30 மீட்டர் நீளம். பிற மரங்களின் மேல் ஏறிக் கிளைத்து வளரும் பெருங் கொடி.
தண்டுத் தொகுதி : தடித்து நீண்டு வளரும். பல கிளைகளை உடையது. கிளை நுனியில் நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
இலை : தனி இலை. 3-4 செ. மீ. X 2-2.5 செ. மீ.
வடிவம் : முட்டை வடிவம்.
நுனி : குறுகிக் கூர்மையானது.
அடி : குறுகியும், வட்டமாகவும் இருக்கும்.
பரப்பு : பசியது; பளபளப்பானது.
நரம்பு : மிகக் குறைவு.
காம்பு : 3-4 மி.மீ நீளம்.