பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480

சங்க இலக்கியத்

சேடல் (பவள மல்லிகை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பேரினப் பெயர் : நிக்டாந்தெஸ் (Nyctanthes)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆர்போர்-டிரிஸ்டிஸ் (arbor-tristis)
தாவர இயல்பு : சிறுமரம். 2-2.5 மீட்டர் உயரமானது. 1 மீட்டர் உயரத்துக்கு மேல் நன்கு வளர்ந்து, கிளைத்து, அடர்ந்திருக்கும்.
தண்டு : அடிமரம் வன்மையானது. 8-12 செ. மீ. வட்டமாக, அகன்று காணப்படும். கட்டை வெளிறிய சிவப்பு அல்லது மஞ்சள் பழுப்பு நிறமானது.
கிளை நுனி : 4 பட்டையாக இருக்கும்.
இலை : தனியிலை. 10-11 X 5-6 செ. மீ. நீள, அகலம். எதிர் அடுக்கில் அமைந்தவை. சற்று நீண்ட முட்டை வடிவம்.
விளிம்பு : கூரிய பற்கள் உடையது.
நுனி : நீண்டு கூர்மையானது.
நரம்பு : நடு நரம்பு தடித்தது. இலை அடியில் உள்ள நரம்புகள் இருமருங்கும் நீண்டு, இலை முழுதும் பரவி இருக்கும். இலைப் பரப்பெல்லாம் கூரிய சிறு முட்கள் உள்ளதால், சொரசொரப்பாக இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில முப்பிரிவாக உண்டாகும் சைம்கள் 4-6 மலர்கள் காணப்படும்.
மஞ்சரிக் காம்பு : சிறியது. மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமுமுள்ள அகவிதழ்க் குழலும்,