பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

481

6 வெண்மையான இதழ்கள் விரிந்தும் காணப்படும். அழகும், நறுமணமும் உளள, ஒழுங்கானது. காம்பற்ற மலரடிச் செதில்களின் கட்கத்தில் உண்டாகும்.
மலரடிச் செதில் : சிறியது. 20-25 X 5-6 மி.மீ. நீள, அகலமுடையது.
புல்லி வட்டம் : முட்டை–உருளை வடிவான 6-7 மி.மீ. நீளமானது. நேர்த்தியானது. 6 பிளவாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. ஆரஞ்சு நிறமானது. மடல்கள் 4-6 விரிந்து வெண்மை நிறமாக இருக்கும்.
மகரந்த வட்டம் : 2 தாள்கள் அல்லிக் குழல் உச்சியில் காம்பில்லாமல் இருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை 2 சூலறை கொண்டது. ஒவ்வோர் அறையிலும் ஒரு நேரான சூல் அடித்தளத்தில் அமைந்திருக்கும்.
சூல் தண்டு : சூல் தண்டு உருளை போனறது. சூல்முடி குறுகியது. இரு பிளவானது.
கனி : ஒரு வட்ட வடிவக் காப்சூல் (Capsule) இருபுறமும் அமுங்கித் தடுப்புச் சுவருக்கு இணையாக இருக்கும். முற்றியவுடன் இரு ஒற்றை விதை கொண்ட அறைகளாகப் பிரியும்.
விதை : நேரானவை. தட்டையானவை. புற உறை மெல்லியது. முளைசூழ் தசையில்லை. வித்திலைகள் தட்டையானவை. முளைவேர் கீழ் மட்டமானது.

இச்சிறுமரம் பெரிதும் இலையுதிர் காடுகளில் 3000 அடி உயரமான இடங்களில் வளர்கின்றது. இந்தியா முழுவதிலும் வளர்ககப்படுகிறது. இதன் மஞ்சள் நிற அல்லிக் குழல்கள் ஆரஞ்சு நிற சாயத்தைக் கொடுக்கும். இதன் மலர்கள் மாலையில்