பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

487

  1. வெண்மை நிறமான அகவிதழ்கள் மூன்றடுக்கானது. வெள்ளலரி எனப்படும். அடியடுக்கின் இதழ்கள் சிறியவை.
  2. வெண்மை நிறமாக 5 அகவிதழ்கள் கொண்டது. இதுவும் வெள்ளலரிதான்.
  3. வெளிர் சிவப்பு நிறமான 5 அகவிதழ்கள் மட்டும்.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்கள் 4-5 மி.மீ - 13 மி.மீ. நீளமானவை எல்லா வித மலர்கட்கும் பொது.
அல்லி வட்டம் : அல்லியிதழ்கள் இணைந்து 6-10 மி.மீ. நீளமான மலர்க் குழல் காணப்படும்.
  1. செவ்வலரி–கணவிரம் 15 இதழ்கள் 3 அடுக்கு ஒவ்வொன்றிலும் 5 அகவிதழ்கள். மேலடுக்கு இதழ்கள். 3 5 X 2-2.2 செ. மீ. அடியடுக்கு இதழ்கள் 3-3 X 2 செ.மீ.
  2. செவ்வலரி. 5 அகவிதழ்கள் மட்டும். மலர்க் குழல் நீளமானது. ஒரே அடுக்கில் அழகாகத் தோன்றும்.
  3. வெள்ளலரியிலும் இதே போன்று 15 இதழ்கள் மூன்று அடுக்காக (5 + 5 + 5) உள்ளன. நிறம்-தூய வெண்மை. மேலடுக்கு இதழ்கள் 3.5-4.2 செ.மீ. நீளம்.
  4. வெள்ளலரி 5 இதழ்கள் மட்டும் ஒரே அடுக்கில் அழகாகத் தோன்றும். மலர்க் குழல் நீளமானது.
  5. வெளிர் சிவப்பு (உரோஸ்) 5 அகவிதழ்கள் மட்டும் மிக அழகாக விரியும். மலர்க் குழல் நீளமானது. 1 செ. மீ. அகவிதழ்கள் 8–10 மி.மீ. X 20-30 மி.மீ. எல்லா