பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

493

மலர் : மஞ்சள் நிறமானது. ஐந்தடுக்கானது. ஒழுங்கானது. இரு பாலானது.
புல்லி வட்டம் : 5 பசிய பற்கள் போன்ற புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் இணைந்து, அடியில் குழல் வடிவாகவும், சற்று மேலே புனல் வடிவாகவும் இருக்கும். மடல் மேலே 5 இதழ்களாக விரியும். பொதுவாக மஞ்சள் நிறமானது. வெள்ளை, சிவப்பு நிற அரளியும் உண்டு.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் அல்லி ஒட்டியவை.
சூலக வட்டம் : இரு சூலக அறை. பெரிதும் ஒரு விதையே வளர்கிறது.
கனி : சதைக் கனி, அமுங்கிய உருண்டை வடிவானது. 5 சிறகுள்ளது. பசிய அல்லது மஞ்சள் நிறமானது.

இப்பேரினத்தில் 2 சிற்றினத்திற்குக் குரோமோசோம் எண்ணிக்கை கண்டு சொல்லப்பட்டுள்ளது. அல்லமாண்டா நெர்ரிபோலியாவில் 2n = 18 எனத் தபாடர் (1980) என்போர் கூறுவர். தேவேஷியா நெர்ரிபோலியா என்பதற்கு 2n = 20 எனத் தபாடர், சென் (1980) தபாடார் (1964), நந்தா (1982) என்போர் கண்டனர்.