பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

35

“தொடர்ந்த குவளை தூநெறி அடைச்சி”-பதிற். 27-2

செங்குவளையாகிய செங்கழுநீர் மலரைச் சிவபெருமானுக்குரிய மலராகப் போற்றுவர் மணிவாசகர்.[1]

இம்மலர், இறைவன் சென்னிமிசையிருப்பதைப் பார்த்து இறைக் காதல் கொண்ட ஒருத்தி, அவன் தானேயாகும் தன்மையுன்னி,

“இன்னியல் செங்கழு நீர்மலர் என்தலை
 எய்துவ தாகாதே”
[2] என்கிறாள்.

குவளைச் செடிக்கு அடியில் வேருடன் கூடிய கிழங்கும் உண்டு. இதனை அடிமட்டத்தண்டு என்பர் தாவரவியலார். புலவரும் கிழங்கின் துணை கொண்டு இச்செடி நீர் வற்றிப் போனாலும் அழிவதில்லை என்பர்.

“நீர்கால் யாத்த நிறை இதழ்க் குவளை
 கோடை ஒற்றினும் வாடா தாகும்”
-குறுந். 388

இதனால் இதனைத் ‘தொடர்ந்த குவளை’ என்பர்.
(பதிற். 27)

குவளையின் இலைகளும், மலர்களும் பசிய நீண்ட காம்புடையன. குவளைப் பசுந்தண்டு (காம்பு) கொண்டு மகளிர் கைகளில் காப்புகளாக அணிவர்.

“பவள வளைசெறித்தாட் கண்டுஅணிந்தாள் பச்சைக்
 குவளைப் பசுங்தண்டு கொண்டு;
 கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை
 நில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
 மல்லிகா மாலை வளாய்”
-பரி. 11: 101-105

மேலும் பெண்கள் குவளை மலருடன், நெய்தல்பூ, கல்லகாரப்பூ (நீர்க்குளிரி) மல்லிகைப்பூ முதலியவற்றை விரவிக் கண்ணியாகப் புனைவர் என்கிறார் நல்லந்துவனார்.

செங்குவளை, ஆம்பல், தாமரை முதலிய கொடிகள் சுனையில் வளர்வன. இவற்றின் இலைகள நீர் மட்டத்தின் மேலே காணப்


  1. “கழுநீர் மாலைக் கடவுள் போற்றி”-திருவா. 4:217
  2. திருவா. 49 : 4