பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

சங்க இலக்கியத்

இடைக்காலத்தில் இதனைக் கிரிமல்லிகை என்றனர். மல்லிகைப் பெயர் பெற்ற இதனால் வெட்பாலையாம் வெண்மைக் குடசம் பூவும் சூடப்பட்டிருத்தல் கூடும். குடசம் தாவரவியலில் ‘அப்போசைனேசி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதற்கு ஹோலரீனா ஆன்டீடிசென்ட்ரிகா என்று பெயர். இது ஒரு சிறு மரம். எல்லாக் காடுகளிலும், 1000 மீட்டர் உயரமான மலைப்பகுதிகளிலும் வளரும். வட இந்தியாவில் மிகுதியாகக் காணப்படுகிறது. இதனுடைய சிற்றினப் பெயரை நோக்கினால், இது ‘டிசென்ட்டரி’ என்னும் சீதள வயிற்றுப் போக்குக்கு மருந்தாகும் என்று தெரிகிறது. குணபாடம்[1], இதனைக் ‘குடசப் பாலை’ என்றும், இது பேதியைக் கட்டும் என்றும் ‘வெட்பாலை’யாகிய குடசம் கசப்புடையதென்றும் கூறுகின்றது.

ஆகவே குடசம் என்னும் வெட்பாலை மரத்தின் பட்டை, நல்ல மருந்துப் பொருள் என்றும் கூறப்படும்.

குடசம்—வெட்பாலை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் இணைந்தவை;
பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி (Apocynaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஹோலரீனா (Holarinena)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆண்டிடிசென்ட்ரிகா (antidysentrica,Wall. )
தாவர இயல்பு : நேராக வளரும் சிறு மரம். இலையுதிர் காடுகளிலும், 1000 மீட்டர் வரை உயரமான மலைப்பகுதிகளிலும் வளர்கிறது.
 

  1. “வாதம்அறும் பேதிகட்டும் மாறாத நீரிழிவும்
     காதம்போம் மேகம் கடக்குங்காண்-தீதடரப்
     பொங்கு கரப்பானும் போகா இரணமும்போம்
     இங்குக் குடசப் பாலைக்கே”
    -அகத்தியர் குணபாடம்