பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



501

என்ற பெயர் பெற்றது. எனினும், தாவரப் பேரறிஞர் ‘காம்பிள்’ இப்பேரினத்தில் 3 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன எனவும், இவற்றின் அகவிதழ்கள் (அல்லி வட்டம்) வலமாகவோ, இடமாகவோ சுழலடுக்கில் அமைந்திருக்குமெனவும் கூறுவர்.

இது, பல்லாண்டு வாழும் புதர்ச் செடி. இது கொத்தாகப் பூக்கும். மலர்கள் வெண்ணிறமானவை. சிவபூசைக்குரிய எண்மலர்களில் இதுவும் ஒன்றென்பர்.

“நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய
 நம்பன்
[1]

என்று சிவபெருமானை நாவுக்கரசர், பாடுகின்றார். மேலும் ‘நந்தியா வர்த்தாமன்’[2] என்று இதனைச் சூடாமணி நிகண்டு கூறும். இதனை முல்லை நிலப்பூ என்பர். சங்க இலக்கியத்தில் வேறெங்கும் இதன் பெயர் காணப்படவில்லை.

நந்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
(அகவிதழ் இணைந்தவை)
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி (Apocynaceae)
தாவரப் பேரினப் பெயர் : எர்வட்டாமியா (Ervatamia)
தாவரச் சிற்றினப் பெயர் : கோரோனேரியா (coronaria, Stapf.)
தாவர இயல்பு : புதர்ச் செடி. பல்லாண்டு வாழும். 2-2.5 மீ உயரமாகவும், கிளைத்தும், அடர்ந்து வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்

  1. அப்பர் தே. ஐயாறு.
  2. சூடாமணி நிகண்டு