பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

இலை : தனி இலை. எதிரடுக்கில், இலைச் செதிலுடையது. இலைக் கோணத்தில் பல நுண்ணிய சுரப்பிகள் உள்ளன.
மஞ்சரி : கிளை நுனியில் நுனி வளராப் பூந்துணர்.
மலர் : வெண்மை நிறமானது. தாம்பாள வடிவானது. வட்டமாகத் தோன்றும். அழகானது. அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாயிருக்கும்.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்கள் சிறியன; அடியில் சுரப்பியுண்டு.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் அடியில் இணைந்து, நீண்ட குழல் வடிவாக இருக்கும். 2-3 மி.மீ. நீளமானது. மேலே மடல் விரிந்து, ஒன்றையொன்று தழுவியிருக்கும். சுற்றடுக்கு முறை. காம்பிள் என்பவர் இவை இடமாகத் தழுவியிருக்கும் என்றும், வலமாகத் தழுவியிருப்பதை எர்வட்டாமியா காடேடா என்றும் கூறுவர். இதில் அடுக்கு நந்தியாவட்டம் என்ற மலரும் உண்டு. இதில் 5 அகவிதழ்களைக் கொண்ட மூன்றடுக்குகள் உள்ளன.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் குட்டையானவை. மகரந்தப் பைகள் நீண்டு கூரியன.
சூலக வட்டம் : 2 சூலக அறைகளைக் கொண்டது. பல சூல்கள் விளையும். இழை போன்ற சூல் தண்டு நீளமானது. சூல்முடி இரு பிளப்புடையது.
கனி : ஒரு புற வெடி கனி போன்ற 2 மெர்ரி கார்ப்பஸ் உண்டாகும். 3-6 விதைகள்.

இம்மலர் கண் நோய்க்கு நல்ல மருந்தென்பர். இது முன்னர் டாபர்னமோன்டானா கோரோனேரியா (Tabernaemontana Coronaria, willd .) எனப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 எனப் பதக் முதலியோரும் (1949) மாங்கிநாட். எஸ்., மாங்கிநாட். ஜி., (1958, 1962) என்போரும் கூறுவர்.