பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



523

கூதாளி, கூதாளம், கூதளம் என்றெல்லாம் கூறப்படும். எனினும், இது சங்கவிலக்கியங்களுள் ‘கூதளம்’ என்றே மிகுதியும் பயிலப்படுகின்றது. இவையன்றி, ‘தாளி’ என்ற கொடி ஒன்றும் பேசப்படுகின்றது. ‘தாளித்தண்பவர் நாளா மேயும்’ (குறுந். 104) என்புழி ‘தாளி’ என்னும் ஒரு வகைக் கொடியுமாம் என்று உரைகாரர் கூறுவர். ‘தாளி’ என்பது கூதளத்தையே குறிக்கும் போலும். குறுந்தொகையும் திருமுருகாற்றுப்படையும் (192) இதனை வெண்கூதளம் என்று கூறும். இதனால் வெண்கூதாளத்திலும் வேறான ‘கொடி’ ஒன்று உண்டென அறியலாம்.

‘சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமொடு’[1] என்றதனால், ‘செங்கூதளம்’ என்றதொரு கொடியும் உண்டென அறிதல் கூடும். நிகண்டுகள் ‘துடி’ என்னும் மற்றொரு பெயரையும் இதற்குச் சூட்டுகின்றன.

வெண்கூதாளமாகிய இதனைத் தாவரவியலில் ஐபோமியா செபியாரியா(Ipomoea sepiaria) எனக் கூறுவர். ‘செங்கூதாளமும்’ இதே பெயரில் அழைக்கப் பெறுமெனினும், இதன் மலர் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

இக்கொடி மலைப்புறத்தில் வளரும் எனவும், குளவி, பாகல், அதிரல் முதலிய கொடிகளுடன் படர்ந்து காணப்படும் எனவும், கூதிர் காலத்தில் பூக்கும் எனவும் கூறுப. செண்பகம், கருவிளம் முதலியவற்றுடன் சேர்த்தும் பயிலப்படும்.

“நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய”
-புறநா. 380 : 7
“பலவுக் காய்ப்புறத்த பசும்பழப் பாகல்
 கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க”

-அகநா. 255 : 23-24
“மழைவிளை யாடும் வளங்கெழு சிறுமலைச்
 சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்”

-அகநா. 47 : 16- 17
“குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரை” -குறுந். 60 : 1

“விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
 கூதிர்க் கூதளத்து அலரி நாறும்”
-நற். 244 : 1-2

“விரிமலர் அதிரலும் வெண் கூதாளமும்”[2]


  1. சிலப். 14 : 88
  2. சிலப். 13 : 156