பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வள்ளி
ஐபோமியா பட்டடாஸ் (Ipomoea batatas,Poir.)

வள்ளி இலக்கியம்

‘வாழை வள்ளி நீள்நறு நெய்தல்’‌ (குறிஞ்‌. 79) என்றார்‌ கபிலர்‌. இவ்வடியில் குறிப்பிடப்படும்‌ ‘வள்ளி’ என்பது ஓரு கொடி. இது சருக்கரை வள்ளி எனப்படும்‌. வள்ளிக்‌ கிழங்குக்காக இக்கொடி பயிரிடப்படுகிறது. வளளுவர்‌ பண்டே நீரின்றி வாடிய இதனைக் குறிப்பிடுகின்றார்.

“ஊடி யவரை உணராமை வாடிய
 வள்ளி முதல் அரிந் தற்று
[1]

இதன் மலர் ஊதா நிறமானது. இப்பூவைக் கடப்ப மலர் மாலையின்‌ இடைஇடையே வைத்துக்‌ கட்டுவர்‌ என்பர் நல் அச்சுதனார்.‌ மலர்‌ விரிந்த போது புனல் வடிவாக இருக்கும். மாலையில்‌ இம்மலரின்‌ மேற்பகுதியான மடல்கள், சுருண்டு தோன்றும்‌.

“சுருளுடைய வள்ளி‌ இடைஇடுபு இழைத்த
 உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ்தார்.

–பரி. 21:10-11
பரிமேலழகர், ‘சுருளுதலை உடைய வள்ளிப்பூ’ என்று உரை கூறுவர்‌. குறவர் மகளாம்‌ வள்ளியை மலராக்கி நயம்பட உரைப்பர்‌ கேசவனார்‌.

“நறுமலர்‌ வள்ளிப்‌ பூநயந் தோயே!–பரி. 14:22


  1. திருக்குறள்‌: 1304