பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

சங்க இலக்கியத்

வள்ளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
அகவிதழ்கள் இணைந்தது.
தாவரக் குடும்பம் : கன்வால்வுலேசி (convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஐபோமியா (Ipomoea)
தாவரச் சிற்றினப் பெயர் : பட்டடாஸ் (batatas, Poir.)
சங்க இலக்கியப் பெயர் : வள்ளி, நூறை
உலக வழக்குப் பெயர் : வள்ளி, சர்க்கரை வள்ளி, வள்ளிக் கொடி
தாவர இயல்பு : படர் கொடி, மென் கொடி நீண்டு, தரை மேல் கிளைத்துப் படர்ந்து வளரும்.
இலை : தனி இலை 3-5 பிளவுள்ளது. நடுப் பிரிவு நீண்டு அகன்று இருக்கும். பக்கத்துப் பிளவுகள் குட்டையாக இருக்கும். 5-10 X 5-9 செ.மீ. பசிய பளபளப்பானது. இலைக் காம்பு நீளமானது. 10 செ. மீ. வரையுள்ளது.
மஞ்சரி : இலைக்கோணத்தில் தனிமலர். மலர்க் காம்பு 8-10 செ. மீ. வரையுள்ளது.
மலர் : ஊதா நிறமானது. இருபாலானது. புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் வடிவாக இருக்கும். 3 செ. மீ. நீளமான குழல்.
புல்லி வட்டம் : 5. பசிய புறவிதழ்களில் புறத்தில் 3 சற்று அகன்று, குட்டையானவை. உட்புறத்தில் 2 புல்லிகள் அகன்று, நீளமானவை. நுனி கூரியது 9 X 4 செ.மீ.
அல்லி வட்டம் : 5 ஊதா நிற இதழ்கள் இணைந்தவை புனல் வடிவான குழல், அடியில் நீண்டிருக்கும். மேற்புறத்தில் புனல் மடல் விரிந்து, அழகாக இருக்கும். மடலில் இக்குடும்பத்தியல்பான 5 பட்டைகள் (இதழ்களை இணைக்கும்) நாமம் போல நீண்டிருக்கும்.