பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மரமல்லிகை
மில்லிங்டோனியா ஹார்ட்டென்சிஸ்
(Millingtonia hortensis)

இது மல்லிகை இனத்தைச் சார்ந்ததன்று. எனினும், மர மல்லிகை என்ற பெயர் கொண்டு உள்ளமையின் இதனைப் பற்றிய தாவரவியல் விளக்கக் குறிப்புகள் வேண்டப்படும். இது கார்மல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியத்தில் காணப்படாத தாவரம்.

மர மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : பிக்னோனியேசி (Bignoniaceae)
தாவரப் பேரினப் பெயர் : மில்லிங்டோனியா (Millingtonia)
தாவரச்சிற்றினப்பெயர் : ஹார்ட்டென்சிஸ் (hortensis)
உலக வழக்குப் பெயர் : மர மல்லிகை, காட்டு மல்லிகை
இயல்பு : மரம்
வளரியல்பு : மீசோபைட்
உயரம் : 10-15 மீட்டர்
வேர்த் தொகுதி : பக்க வேர்கள் பலவாகக் கிளைத்துப் பருத்து நீண்டு வளரும். வேர்களிலிருந்து இம்மரம் தானாக வளரும்.
தண்டுத் தொகுதி : நேரான உயரமான மரம். தக்கை போன்ற பட்டை உடையது.