பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552

அல்லி வட்டம் : 5 (கிரிம்சன் நிறமான) செந்நீல ஊதா நிறம். அகவிதழ்கள் அடியில் இணைந்து, வளைந்த குழல் போன்றது; 2.அடியிதழ்கள் சிறியவை; மேலிதழ்கள் சற்றே பெரியவை. பூத்தவுடன், மடல்கள் விரிந்து, புனல் போன்ற துய்யுடன் தோன்றும். அகவிதழ்களின் உட்புறத்தில் நுண்ணிய பஞ்சு போன்ற நுண் மயிர் அடர்ந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகளில், 2 சற்று குட்டையானவை. ஐந்தாவது தாதிழை சுருங்கிப் போயிருக்கும். தாதுப்பைகள் பளபளப்பானவை.
சூலக வட்டம் : சூலகம் அடி ஒட்டியது. இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள்; சூல்தண்டு மெல்லியது. இரு பிளவுள்ளது சூல்முடி.
கனி : 18 அங்குல நீளமான காப்சூல் எனும் வெடிகனி; அடிமரம் வலியது; மஞ்சள் கலந்த பழுப்பு நிறமானது. பயன்படுத்தப்படவில்லை.