பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

555

மலர் : .மலர்கள் இலைக் கோணத்தில் தனித்து உண்டாகும். தூய வெண்ணிற மலர் கவிழ்ந்து மலரும். அடியில் அகவிதழ்கள் குழாய் வடிவாகவும், நுனியில் இரு உதடுகளாகவும் இருக்கும்.
புல்லி வட்டம் : சிறிய புறவிதழ்கள் 6 சிறு பிளவுகளாக இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து, 1 முதல் 1.25 அங்குல நீளமாக இருக்கும். நுனியில் மடல் இரு உதடுகளாக விரியும். மேல் உதடு 3 இதழ்களை உடையது. சற்று நீளமானது. அடி உதடு இரு இதழ்கள் இரு பக்கங்களிலும் இருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள்; 2 தாதிழைகள் உயரமானவை. மடலுக்குள்ளே அடங்கியிருக்கும். தாதுப்பை சற்று நீண்டது. அடியில் மலர்க் கிண்ணம் வட்ட வடிவானது.
சூலக வட்டம் : இரு செல் உள்ளது. சூலகத்தின் நடுவே உள்ள பிரிவுச் சுவர் இதனை 4 ஆகப் பிரிக்கும். பல சூல்கள் உண்டாகும். ஒவ்வொரு செல்லிலும் ஒரு விதை வரிசை உண்டாகும்.
கனி : காப்சூல் என்ற உலர்கனி: இரு பகுதியாக வெடிக்கும். பல விதைகள் உதிரும்.
விதை : இதுதான் ‘எள்’ எனப்படும். இதில் மெல்லிய வித்திலைகள் சற்று நீண்டு இருக்கும்.


எள்ளில் உண்டாகும் நெய்தான் எண்ணெய் எனப்படுவது. இதற்கு நல்ல எண்ணெய் என்று பெயர். இந்த எண்ணெய் உணவாகவும், வேறு பல முறைகளாகவும் பயன்படும். இதற்காக எள்ளுச் செடி வயல்களில் விதைத்துப் பயிரிடப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என மொரிநாகாவும் பிறரும்