பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குறிஞ்சி
பீலோபில்லம் குந்தியானம்
(Phelophyllum kunthianum,Nees.)

‘தண்கயக் குவளைக் குறிஞ்சி வெட்சி’ (குறிஞ். 63) என்பது கபிலர் வாக்கு. குறிஞ்சி என்னும் சிறிய புதர்ச் செடி ஐயாயிரம் அடிக்கு மேலான மலைப் பாங்கில் வளர்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இயல்புடையது. குறிஞ்சி மலர் நீல நிறமானது. இச்செடி 1898, 1910 ஆகிய ஆண்டுகளில் பழனி மலைப்புறத்திலும், 1887, 1899, 1910 ஆகிய ஆண்டுகளில் நீலரியிலும் (நீலமலை) பூத்திருந்ததாகப் பைசன் (Fyson) என்னும் வன அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன் தண்டு கரியதாகவும் வலியதாகவும் இருக்கும். இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதின் தாவரவியலுண்மை யாது என்பதையும், இது இங்ஙனம் பூப்பதற்கு இச்செடியில் சுரக்கும் ஊக்கி நீர் (Hormone) எவ்வியல்பிற்று. என்பதையும் இன்னும் யாரும் ஆய்வு செய்திலர்.

சங்க இலக்கியப் பெயர் : குறிஞ்சி
உலக வழக்குப் பெயர் : குறிஞ்சிச்செடி. கட்டதடா
தாவரப் பெயர் : பீலோபில்லம் குந்தியானம்
(Phelophyllum kunthianum,Nees.)

குறிஞ்சி இலக்கியம்

தமிழில் தாவரம் என்ற தலைப்பில் குறிஞ்சியைப் பற்றிய எமது முதல் கட்டுரை தமிழ்ப் பொழிலில் (1959-துணர். 34: மலர்: 11) வெளியிடப்பட்டது. குறிஞ்சியின் தாவரப் பெயர் அப்போது ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus, And.) என்றிருந்தது. அக்கட்டுரையைத் தழுவியே