பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

561

குறிஞ்சியின் தண்டு ‘கருமை. வலிமையுமாம்’ என்னும்படி கரிய நிறமுடையதோடன்றி, வலிமையுடையதாகவும், தடித்தும் உள்ளதென்பதைப் புலவர் பெருமக்கள் அங்ஙனமே கூறியுள்ளனர். ஸ்ட்ரொபிலாந்தெஸ் எனப்படும் இப்பேரினத்தில், இதுகாறும் நூற்றுத் தொண்ணூற்றிரண்டு சிற்றினங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் ஆசியாவில் நூற்றெண்பதும், இந்திய நாட்டில் நாற்றைம்பத்தி நான்கும், ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒன்றும் (Hooker V 1; 4, p 429-477), தண்டமிழ் நாட்டில் நாற்பத்தாறும் (Gamble II, 73) உள்ளன. நீலமலையிலும், கோடைக்கானல், பழனி மலைகளிலும் வளரும் ஸ்ட்ரொபிலாந்தெஸ் பேரினத்தை, பத்தொன்பது இனங்கள் நான்கு முதல் பதினைந்து ஆண்டுகட்கு ஒரு முறை பூத்து அழியும் இயல்பின என்பர் பைசன் (Fyson). இவற்றுள் குறிஞ்சியை முதன்முதலாகக் குந்தியானஸ் என்ற இனப்பெயர் தந்து, ஆய்வுரை எழுதியவர் டி. ஆண்டர்சன் (T. Anderson) என்பவர். இப்போது குறிஞ்சிச் செடியில் ஆய்வு செய்து, இதன் பெயரை மாற்றியவர் நீஸ் என்பவர். இதனால், இதன் இப்போதைய பெயர் பீலோபில்லம் குந்தியானம் என்பது. ஒரு தாவரத்திற்கு இனப் பெயர் சூட்டி, ஆய்வுரை எழுதுபவரின் பெயரைத் தாவரப் பெயரிடும் முறைக்கான விதிகளின் படி, அத்தாவரப் பெயருடன் சேர்த்து எழுதுவது மரபு. அதனால் குறிஞ்சி என்பது பீலோபில்லம் குந்தியானம், நீஸ் (Phelophyllum kunthianum, Nees.) என்று எழுதப்படுவதே முறையாகும். இப்பேரினத்தில் உள்ள பிற இனங்கள், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பூக்காத நிலையில், குறிஞ்சியை இவற்றினின்றும் பிரித்தறிதல் அத்துணை எளிதன்று. வேறினங்களின் பூக்கள் வெள்ளியனவாகவும், வெண்மை கலந்த நீலமாகவும், ஊதா நிறமாகவும் இருக்கும். பீலோபில்லம் செடிகள், பெரும்பாலும் மூவாயிரம் அடி உயரத்திற்கு மேல் வளரும் இயல்பின. லஷிங்டன் (Lushington) தாவரத்தின் தமிழ்ப் பெயர் பட்டியல் நூலில் ஸ்ட்ரொபிலாந்தெஸ் கான்சாங்குனேயஸ் (Strobilanthes Kansanguineus, C. B. Clarke) என்பதைப் பெருங்குறிஞ்சி எனவும், ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் என்பதைக் குறிஞ்சி எனவும், ஸ்ட்ரொபிலாந்தெஸ் சீலியேடஸ் (Strobilanthes cilliatus, Nees.) என்பதைச் சிறு குறிஞ்சி எனவும் கூறுகின்றார். ‘எஸ். கான்சாங்குனேயஸ்’ வெள்ளிய அல்லது நீலப் பூக்களைப் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை விரியப் பூக்கும் இயல்பிற்று. மேற்குறித்த ‘சருங்காற் குறிஞ்சி மதனில் வான்பூ’ (நற். 268 : 1) என வரும் அடியில் உள்ள ‘மதனில் வான்பூ’ என்ற தொடருக்கு ‘வலிமையில்லாத வெளிய பூ’ என உரை கூறுவர். வான்பூ என்றது, வெண்ணிறத்தைக் குறிக்கு-

 

73-36