பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

570

சங்க இலக்கியத்

அணிக் கூட்டுவர் எனவும், மலரின் அகவிதழ்க் காம்பு மீன் முள்ளை ஒத்து வெள்ளியதாக இருக்குமெனவும், மலர்கள் குலையாகப் பூக்குமெனவும், முதிர்ந்த மலர் மட்டும் கழன்று, நீர்த் துறையில் பறக்குமெனவும் அறிய முடிகின்றது. இவ்வுண்மைகள் தாவரவியல் உண்மைகளோடு ஒத்திருத்தலின், இதன் தாவர இரட்டைப் பெயர் ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா என்று ஐயமறக் கணிக்க முடிகின்றது.

இம்முள்ளிச் செடி நிறைந்த கரையில் நண்டுகள் வந்து ஆம்பல் அறுக்கும் என்றும், இதன் வேர்களிடத்தே நண்டுகள் வந்து தங்கும் என்றும், இவற்றை மகளிர் பிடித்தும், முள்ளியில் பூத்த மலர்களைக் கொய்தும் விளையாடுவர் என்றும் இலக்கியம் கூறும்.

“முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
 புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்”
-ஐங். 21 : 1-2

முள்ளி 1 நீர்முள்ளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)

பர்சொனேலீஸ் (Personales)

தாவரக் குடும்பம் : அக்காந்தேசி (Acanthaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆஸ்டெரகாந்தா (Asteracantha)
தாவரச் சிற்றினப் பெயர் : லாஞ்சிபோலியா (longifolia)
சங்க இலக்கியப் பெயர் : முள்ளி
உலக வழக்குப் பெயர் : நீர்முள்ளி, முள்ளி, மீன்முள்ளி
தாவர இயல்பு : ஒரு வலிய செடி. ஈரமுள்ளவிடங்களிலும், மருத நில வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் வளரும்.
இலை : மெல்லிய பசிய நீண்ட இலை. 7 அங்குல நீளமும், ஓர் அங்குலம் வரை அகலமும் உள்ளது. கணுவில் 5-6 இலைகள்