பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

571

தண்டைச் சுற்றி வளரும். அவற்றுடன் சற்று வளைந்த நீண்ட பல முட்கள் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் மேற்புறத்தில் உள்ள இலைகள் சற்றுப் பெரியனவாக இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் பல நீலநிறப் பூக்கள் சற்று வளைந்த முட்களுடன் கூடி மலரும். காண்போருக்கு ஒரு பூங்கொத்துப் போலவே காணப்படும்.
மலர் : மலரடிச் செதில் இலை போன்றது. நீண்ட இரு சிறு செதில்களும் உண்டு. மலர் நீல நிறமானது.
புல்லி வட்டம் : நான்கு பிளவானது. மேற்புறத்தில் உள்ள புறவிதழ் பெரியது.
அல்லி வட்டம் : இரு உதடுகளை உடையது. மேல் உதட்டில் 2 அகவிதழ்கள் (இணைந்தவை) அடி உதட்டில் 3 அகவிதழ்கள் (இணைந்தவை) அடியில் இந்த 5 அகவிதழ்களும் இணைந்து, குழல் வடிவாக இருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள், 2 நீளமானவை. தாதுப் பைகள் இரு செல்லுள்ளவை.
சூலக வட்டம் : 2 செல் உள்ள சூலகம் ஒவ்வொரு அறையிலும் நான்கு சூல்கள் உண்டாகும். சூல்தண்டு நுண்மயிர் அடர்ந்தது.
கனி : நீண்ட காப்சூல் என்ற வெடிகனி.
விதை : 4-8 விதைகள் வலிய விதைக் காம்பில் உண்டாகும். தட்டையானவை. நீரில் நனைந்தால், வெள்ளிய நுண்மயிர்கள் தோன்றும்.

இதனை ஒரு மருந்துச் செடி என்ப.

இதனுடைய முள்ளின் உள்ளமைப்பு இலையமைப்புடையதாக விருத்தலின், இதனை (ஸ்பைன்-Spine) மென்முள் என்றுதான் கூற வேண்டுமல்லாமல், (தார்ன்-Thorn) வன்முள் என்று