பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582

சங்க இலக்கியத்

நொச்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
(Bicarpellatae)
லாமியேலீஸ் (Lamiales)
அகவிதழ் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : வர்பினேசி (Verbenaceae)
தாவர இயல்பு : பெரும் புதர்ச்செடி என்பர். எனினும், இது சிறு மரமாகும். வெற்றிடங்களில் தழைத்துக் கிளைத்து வளரும்.
சங்க இலக்கியப் பெயர் : நொச்சி, சிந்துவாரம்.
இலை : கூட்டிலை; எதிரடுக்கில் 3 முதல் 7 சிற்றிலைகள் வரை காணப்படும். பசிய சிற்றிலைகள் நீண்டு, நுனி கூரியதாக இருக்கும். சிற்றிலைகளுக்குக் காம்பு உண்டு.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. கிளை நுனியில் மலர்கள் கொத்துக் கொத்தாக, ஓர் அடி நீண்ட இணர்க் காம்பில் உண்டாகும்.
மலர் : நீல நிற மலர்கள். அரும்புகள் உருண்டை வடிவானவை. மலரடிச் செதில் சிறியது.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. மேலே 5 பிளவானது. முக்கோண வடிவானது.
அல்லி வட்டம் : இரு உதடுகளாலானது. அகவிதழ்கள் ஐந்தும் இணைந்து, அடியில் குழல் போன்றிருக்கும். மேல் உதடான மடல் 2 இதழ்களால் ஆனது. அடி உதடான மடல் 3 இதழ்களைக் கொண்டது. விளிம்பில் 3 பிளவுகள் காணப்படும். அடி உதடான மடல்களில் நடுமடல் பெரியது. சற்று நீண்டது.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகளில் 2 உயரமானவை. 2 குட்டையானவை. இவை எல்லாம்