பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

583

மலரின் மடலுக்கு வெளியே நீண்டு காணப்படும்.
தாதுப்பை : தாதிழைகளின் நுனியில் உள்ள தாதுப் பைகள் முதலில் நேராகத் தொங்கும். பின்னர் விரிந்து இரு புறமும் நீளும்.
சூலக வட்டம் : 2 செல்லால் ஆனது. நடுவில் தடுப்புச் சுவர் உண்டாகி நான்கு பகுதிகளாகி விடும்.
விதை : நான்கும் நான்கு சூலறைகளில் உண்டாகும். முட்டை வடிவானவை. விதையுறை கடினமானது. வித்திலைகள் சதைப்பற்றானவை.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என மாலிக் என். ஏ, ஆமத் (1963) என்போரும், 2n = 26 என சோப்தி, சிங் (1961) என்போரும் கணித்துள்ளனர். இதன் அடி மரம் வலியது. வெண்கருப்பு (யானை) நிறமானது. இதன் பட்டையும் இலைகளும் மருந்துக்குப் பயன்படும்.