பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சங்க இலக்கியத்

மகளிர் இதனுடைய இலைகளைத் தனித்தும் ஆம்பல் இலைகளுடன் சேர்த்தும் தழையணி செய்வர். நெய்தல் மலரை மகளிரின் கண்களுக்கு உவமிப்பர். மலரில் நறுமணமுண்டு. கழியிடத்துப் பூக்கும் நெய்தல் மலரை மகளிர் கொய்து சூடிக் கொள்வர். கரும்பின் பாகை அடுகையினாலே உண்டாகும் புகை பட்டு நெய்தல் மலர் வாடிப் போகும் என்றுரைக்கும் பட்டினப்பாலை, நெய்தல்கொடி தாமரையுடனும், குவளையுடனும் வளரும் என்ப.

“சிறுபாசடைய செப்பு ஊர் நெய்தல்
 தெண்ணீர் மலரின்...............”
-நற். 23 : 7-8

“கொடுங் கழிநிவந்த நெடுங்கால் நெய்தல்
 அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ”
-நற். 96 : 7-8

“ஒள்நுதல் மகளிர் ஓங்கு கழிக்குற்ற
 கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல்”
-நற். 283 : 1-2

“கானல் அம்பெருந் துறைக்கவினி மாநீர்ப்
 பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
 விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்”

-அகநா. 70. 10-12

“கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
 சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்”

-புறநா. 61. 1-2

“மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்”-பதிற். 64. 16

“அருவி யாணர் அகன்கண் செறுவின்
 அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
 செறுவினை மகளிர் மலிந்த வெக்கை”
-பதிற். 71. 1-3

“வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து
 மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி”
-பதிற். 78. 4-5

“நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
 பூச்சாம்பும் புலத்து ஆங்கண்”
-பட்டின. 11-12

“மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி”

-பட்டின. 241

“கள் கமழும் நறு நெய்தல்”-மதுரைக். 250

“வாழை வள்ளி நீள்நறு நெய்தல்”-குறிஞ். 79

“...வெண்காற் செறுவில்
 மைஎன விரிந்த நீள் நறுநெய்தல்”
-மலைபடு. 123-124