பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

துழாய்
ஆசிமம் சாங்க்டம் (Ocimum sanctum,Linn.)

சங்க இலக்கியங்கள் இதனைத் துழாய், துளவு, துளவம் என்று குறிப்பிடுகின்றன. இச்செடி திருமாலுக்கு உரியதெனப் போற்றப்படும். வீடுகளில் வளர்க்கப்பட்டுப் பூசிக்கப்படும்.

சங்க இலக்கியப் பெயர் : துழாய்
தாவரப் பெயர் : ஆசிமம் சாங்க்டம்
ஆங்கிலப் பெயர் : தூய பேசில் (Sacred Basil)

‘நறிய இணர்களை உடைய திருத்துழாய் சூடியவன் அருளினல்லால் பெருமைமிக்க துறக்கமேறுதல் எளிதோ?’ என்றிசைக்கும் பரிபாடல்.

இதன் உலர்ந்த தண்டினை மணி மணியாகச் செய்து மாலை சேர்த்து அணிவர்.

துழாய் இலக்கியம்

“தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி”-குறிஞ். 90
நக்கலர் துழாஅய் நாறுஇணர்க் கண்ணியை”-பரி. 4 : 58
துளவம் சூடிய அறிதுயி லோனும்”-பரி. 13 : 29
கள்ளணி பசுந்துள வினவை”-பரி. 15 : 54

சங்க இலக்கியங்கள் கூறும் துழாய் என்னும் இச்செடி துழாய், துளவம், துளவு என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது. குறிஞ்சிப் பாட்டடியில் வரும் துழாய் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘திருத்துழாய்ப்பூ’ என்று உரை கண்டுள்ளார். திருமாலுக்கு இத்திருத்துழாய் உரியதாகும். ‘கள்ளணி பசுந்துள வினவை’ என்றமையின் இதன் மலரும் இதன் இலைக் கொத்தும்