பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

592

சங்க இலக்கியத்

கண்ணியாகவும் மாலையாகவும் கட்டப் பெற்றுத் திருமாலுக்கு அணிவிக்கப்படும். திருமால் ‘துழாயோன்’ என்று குறிப்பிடப் படுவதல்லால், அவனருளினல்லால் துறக்கம் ஏறுதல் எளிதன்று என்றும் கூறும் பரிபாடல்.

“காறுஇணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
 ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்”
-பரி. 15 : 15-16

திருத்துழாய் சூடிய திருமாலின் சேவடி பரவுதும் என்று பதிற்றுப் பத்து கூறும்.

“கண்பொரு திகிரி கமழ்குரற் துழாஅய்
 அலங்கல் செல்வன் சேவடி பரவி”
-பதிற். 31 : 8-9

இதன் கிளை நுனி நீண்டு, பூங்கொத்தாகி விடும். இதில் அடுக்கு அடுக்காக மலர்கள் உண்டாகும். மலரின் புறவிதழ்கள் இணைந்து, பசிய குவளை போன்றிருக்கும். அகவிதழ்கள் இணைந்து, மங்கிய வெண்ணிறமாகவும், மேலே மடல்கள் இரு பிளவுகளாகவும் விரியும்.

துழாய் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
லாமியேலீஸ் (Lamiales)
தாவரக் குடும்பம் : லேபியேட்டே(Labiatae)
அகவிதழ் இணைந்தவை.
தாவரப் பேரினப் பெயர் : ஆசிமம் (Ocimum)
தாவரச் சிற்றினப் பெயர் : சாங்க்டம் (sanctum)
சங்க இலக்கியப் பெயர் : துழாய், துளவம், துளவு
உலக வழக்குப் பெயர் : துளசி